வருபவர்களும் பேசுபவர்களும்….

விருட்சம் இலக்கியச் சந்திப்பு என்ற பெயரில் 39வது கூட்டம் நடைபெற உள்ளது வரும் சனிக்கிழமை அன்று.
கடந்த 12 மாதங்களாக ஸ்ரீராம் குரூப் அலுவலகத்தில் இக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
முதல் கூட்டத்தை திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்கி ஜானகிராமனும் நானும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அப்போது கூட்டம் ஆரம்பித்தபோது எந்தத் தலைப்பில் இக் கூட்டத்தை தொடர்ந்து நடத்துவது என்பது புரியாமல் இருந்தது. பின் தானாகவே ஒரு எழுத்தாளரைப் பற்றி இன்னொருவர் பேசுவது போல் கூட்டத்தை மாற்றிக் கடந்த 12 மாதங்களாக நடத்திக்கொண்டு வருகிறேன். வருகிறேன் என்று சொல்வதை விட வருகிறோம் என்று சொல்வது சரியாக இருக்கும். பேசுவோர், கூட்டத்திற்கு வருபவர்கள் என்று எல்லோரும் சேர்ந்துதான் இதை நடத்துகிறோம்.
முதலில் இக் கூட்டத்திற்கு எத்தனைப் பேர்கள் வருவார்கள் என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன். இப்போது அந்த யோசனை போய்விட்டது. எல்லாக் கூட்டங்களையும் ஆடியோவிலும் வீடியோவிலும் பதிவு செய்து கொண்டு வருகிறோம்.
இக் கூட்டம் நடத்த எனக்கு எப்போதும் உறுதியாக நிற்பவர்கள் கிருபானந்தன், ராஜேஸ் சுப்பிரமணியன், சந்தியா நடராஜன் அவர்கள். இன்னும் பல எழுத்தாள நண்பர்களுடன் தொடர்புகொண்டு பேச அழைத்துக்கொண்டிருக்கிறேன்.
வருபவர்களும் பேசுபவர்களும் நடத்தும் கூட்டம் இது. இக் கூட்டத்திற்கான அழைப்பிதழை இத்துடன் இணைக்கிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன