ஒவ்வொரு மூன்றாவது சனிக்கிழமையும் (16.12.2017) நான் கூட்டம் நடத்துவது வழக்கம். நான் என்று சொல்வதை விட என் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து நடத்தும் கூட்டம் என்பதால் நாங்கள் என்று சொல்வது சரியாக இருக்குமென்று தோன்றுகிறது. மூகாம்பிகை காம்பௌக்ஸில் ஏழுôவது கூட்டமாக 16ஆம் தேதி ஒரு கூட்டம் நடத்தினேன். தஞ்சாவூர் கவிராயர் தஞ்சை ப்ரகாஷ் பற்றி பேசினார். வழக்கத்தைவிட கூட்டத்திற்கு வருபவரைவிட இந்த முறை அதிகமாகவே கூட்டத்திற்கு வந்திருந்தார்கள்.
தஞ்சாவூர் கவிராயரைப் பார்க்கும்போது எனக்கு ஜெயகாந்தான் ஞாபகம் வருவதுண்டு. அதேபோல் தஞ்சை ப்ரகாஷ் ஸ்டெல்லா புரூûஸ ஞாபகப்படுத்துவார்.
இக் கூட்;டத்தை முழுவதும் நான் பதிவு செய்து வைத்திருக்கிறேன். தஞ்சாவூர் கவிராயர் கூட்டத்தில் பேசும்போதும் ஜெயகாந்தனை ஞாபகப்படுத்தினார். நெகிழ்ச்சியான கூட்டம் இது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் தஞ்சை ப்ரகாஷ் குறித்துப் பேசினார். ப்ரகாஷ் தஞ்சாவூரில் ஆற்றிய இலக்கியப் பணியைப் பற்றி கோர்வையாகப் பேசினார். ப்ரகாஷ் குறித்து சில புதிய தகவல்களை தெரிந்துகொள்ள முடிந்தது.
விருட்சம் சார்பாக இதுவரை நடந்த 7 கூட்டங்களும் சிறப்பாக நடந்ததற்குக் காரணம். திருப்பூர் கிருஷ்ணன் முதன் முதலா தி ஜானகிராமன் குறித்துப் பேசியதுதான் காரணம் என்று தோன்றுகிறது. இன்னும் பல எழுத்தாளர்களைப் பற்றி இக் கூட்டங்களில் தொடர்ந்து பேச வேண்டுமென்று நினைக்கிறேன். ஊரப்பாக்கத்திலிருந்து வந்திருந்து கலந்துகொண்ட தஞ்சாவூர் கவிராயருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் என் நன்றி.