நான் இதுவரை 200 கூட்டங்கள் நடத்தியிருப்பேன். 1988ஆம் ஆண்டிலிருந்து விருட்சம் தொடங்கியதிலிருந்து கூட்டங்கள் நடத்தி வருகிறேன். ஆனால் நான் தொடர்ச்சியாக கூட்டங்கள் நடத்தவில்லை. நான் பதவி உயர்வுப் பெற்று பந்தநல்லூர் என்ற ஊருக்குப் போனபின் கூட்டங்கள் நடத்தவில்லை. ஏன் நான் திரும்பவும் சென்னை மாற்றல் ஆகி வந்தபிறகு திரும்பவும் கூட்டங்களை நடத்திக்கொண்டு வருகிறேன். கூட்டம் என்பது ஒரு இனிமையான பொழுதைக் கழிக்கக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். அதற்கான முயற்சியைத்தான் செய்துகொண்டு வருகிறேன்.
கூட்டத்தில் பேசுபவரும், கூட்டத்திற்கு வருகை தருபவர்களையும் நான் முக்கியமாகக் கருதுகிறேன். நாளை நடைபெறும் கூட்டத்திற்கு எல்லோரும் வந்திருந்து சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.