வைதீஸ்வரனின் பிறந்த நாள் போன மாதம் 22ஆம் தேதி நடந்துள்ளது. இதை ஒட்டி லதா ராமகிருஷ்ணன் மனக்குருவி என்ற வைதீஸ்வரனின் முழுத் தொகுப்பை கொண்டு வந்துள்ளார். 1961 ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டு வரை வைதீஸ்வரன் எழுதிய கவிதைகள் மட்டுமல்லாமல், அவருடைய அற்புதமான ஓவியங்களும் கொண்ட தொகுப்பு இது. ஒவ்வொருவரும் வாங்கிப் பாதுகாக்க வேண்டிய தொகுப்பு. ரூ.450 கொண்ட இப்புத்தகத்தை நாளை மட்டும் சலுகை விலையில் தர உள்ளோம்.
வருகிற ஆறாம் தேதி வைதீஸ்வரனும், அவர் மனைவியும் சிட்னி செல்கிறார்கள். அவர்கள் அடுத்த ஆண்டு திரும்பி வர உள்ளார்கள்.
அவருடைய பிறந்தநாளை ஒட்டியும், அவருடைய முழுத் தொகுதியை ஒட்டியும் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்துள்ளோம். அவர் கவிதைகளை அவருடைய நெருங்கிய நண்பர்கள், வாசகர்கள் வாசிக்க உள்ளார்கள். அதாவது கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் அவருடைய கவிதைகளை வாசித்து அவரைப் பெருமைப் படுத்துகிறோம்.
இக் கூட்டம் நாளை மாலை 6 மணி சுமாருக்கு நடக்க உள்ளது. இக் கூட்டத்தில் வைதீஸ்வரனும் பங்கு கொள்கிறார். அவர் முன்னிலையில் அவருடைய கவிதைகளையும் அவர் கவிதைகள் குறித்து கருத்துக்களையும் பதிவு செய்ய உள்ளோம்.
நாளை மனக்குருவி புத்தகத்தில் வைதீஸ்வரனே கையெழுத்திட்டு புத்தகத்தை விலைக்குக் கொடுக்க உள்ளார். இக் கூட்டத்திற்கு திறளாக வந்திருந்து எல்லோரும் சிறப்பு செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
கூட்டம் நடக்கும் தேதி : 4ஆம் தேதி – புதன் கிழமை
நேரம் : 6 மணிக்கு
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் கே கே நகர்
இப்படிக்கு
அழகியசிங்கர், நவீன விருட்சம், (9444113205)
வேடியப்பன், டிஸ்கவரி புக் பேலஸ் (9940446650)