சமீபத்தில் நான் மூன்று கூட்டங்களை நடத்தி உள்ளேன். இந்த மூன்று கூட்டங்களிலும் பேசியவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பேச்சுக்களைக் கேட்க வந்தவர்களுக்கு அதிகப்படியான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல் கூட்டம் ஜøன் மாதம் நடந்தது. திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் தி ஜானகிராமனைக் குறித்துப் பேசினார். உண்மையில் அன்று தி ஜானகிராமனை நேரில் அழைத்து வந்து அவர் பக்கத்தில் உட்கார வைத்து உரையாடியது போல் தோன்றியது. இரண்டாவது கூட்டம் ஜøலை மாதம் நடந்தது. இக் கூட்டத்தில் பெருந்தேவி அவர்கள் புதுமைப்பித்தன் படைப்புகளைப் பற்றிப் பேசினார். பெருந்தேவியின் பேச்சைக் கேட்டு புதுமைப்பித்தனே நெகிழ்ந்து போனதுபோல் உணர்வு ஏற்பட்டது.
மூன்றாவது கூட்டமாக இன்று கடற்கரை ஏ கே செட்டியாரைப் பற்றி பேசினார். அவருடைய பேச்சை ஏ கே செட்டியார் கேட்டிருந்தால், அவரை மனமுவந்து ஆசிர்வாதம் செய்திருப்பார். எனக்கு என்ன மலைப்பு என்றால் 2000 பக்கங்களுக்கு மேல் உள்ள ஏ கே செட்டியாரை தேடிக் கண்டுபிடித்து பதிப்பித்தது. இந்தப் புத்தகத்திற்கு கடற்கரை 30 பக்கங்களுக்கு மேல் பதிபாசிரியர் உரை எழுதி உள்ளார். ஏ கே செட்டிôர் புகழ் ஓங்குவதோடல்லாமல் கடற்கரையின் புகழும் ஓங்கும். புத்தகத்தைப் பதிப்பித்த சந்தியா பதிப்பகம் வாழ்க. என் புத்தக அலமாரியை அலங்கரிக்க இப் புத்தகத்தை விலைக்கு வாங்கி உள்ளேன்.
இந்த மூன்று உரைகளையும் நான் சோனி வாய்ஸ் ரிக்கார்டில் பதிவு செய்து கம்ப்யூட்டரில் கொண்டு வந்து விட்டேன். திருப்பூர் கிருஷணன் உரையை எல்லோரும் கேட்டிருப்பீர்கள். அதேபோல் பெருந்தேவி பேசியதையும், கடற்கரை பேசியதையும் ஒருவர் கேட்க வேண்டும். அதற்கான முயற்சியை நான் செய்ய உள்ளேன். கூடிய விரைவில்.
இக் கூட்டத்திற்கு வருபவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிலர் கூட்டத்திற்கு வருகிறார்கள். சிலர் கூட்டத்திற்கு வரவேண்டுமென்று நினைத்து வர முடியாமல் போய் விடுகிறது. இன்னும் சிலரால் கூட்டத்திற்கு வரவே முடியவில்லை. ஆனால் இதுமாதிரியான கூட்டங்கள் தொடரந்து நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் எல்லோரும் வந்துவிட்டால் கூட்டம் நடக்கும் இடமே தாங்காது.
பேசியதை யூட்யூபில் வெளியிட்டால் அனைவரும் கேட்டுப் பயன் அடையலாம். சமீபத்தில் s ராமகிருஷ்ணன் கார்ல் மார்க்ஸ் பற்றி பேசியது அவ்வாறு வெளிவந்துள்ளது.
Sir,
I don’t know the technique of transferreing the speech to You tube. I have to depend some experts for this. That is the problem. Soon I will do it