விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 28வது கூட்டம் இந்த மாதம் மூன்றாவது சனிக்கிழமை வழக்கம்போல் நடைபெற உள்ளது. ஒவ்வொரு முறையும் இக் கூட்டத்திற்கு வருபவர்களை நான் வரவேற்கிறேன். இந்த முறை ஏ கே செட்டியார் பற்றிய கூட்டம். சந்தியா பதிப்பகம் மூலம் வெளிவந்த ஏ கே செட்டியார் புத்தகத்தைத் தொகுத்து அளித்தவர், கடற்கரை மந்தவிலாச அங்கதம். இத் தொகுப்பு 2000 பக்கங்களைக் கொண்டது. அவர் தன் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள உள்ளார். இக் கூட்டம் பற்றிய தகவலை எல்லோரும் பகிர்ந்து அளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். காந்தியைப் பற்றி ஏ கே செட்டியார் எடுத்த ஆவணப்படமும் தி நகரில் உள்ள தக்கர் பாபா கல்வி நிலையத்தில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ.100 தான். ஒவ்வொருவரும் வாங்கிப் பாதுகாக்க வேண்டிய ஆவணப்படம். இதோ கூட்டத்திற்கு ஆன அழைப்பிதழை உங்களுக்கு அளிக்கிறேன். அழைப்பிதழைத் தயாரித்து அளித்தவர் என் நண்பர் கிருபானந்தன். அவருக்கு நன்றி பல.