ஒவ்வொரு மாதமும் மூன்றாவது சனிக்கிழமை கூட்டம் நடத்துவதாக தீர்மானித்துள்ளேன். முதல் கூட்டத்தை திருப்பூர் கிருஷ்ணன் தி ஜானகிராமனும் நானும் என்ற தலைப்பில் பேசி துவக்கி வைத்தார். இரண்டாவது கூட்டமாக நாளை பெருந்தேவி அவர்கள் புதுமைப்பித்தன் கதைகளும் நானும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார். இப்படியாக ஒவ்வொரு எழுத்தாளுமைகளையும் அறிமுகப்படுத்துவது விருட்சம் இலக்கியச் சந்திப்பின் முக்கிய நோக்கம். நாளை நடக்கும் கூட்டத்திற்கு புதுமைப்பித்தனின் முழுத்தொகுப்பு சந்தியா பதிப்பு வெளியிடு விற்பனைக்குக் கிடைக்க முயற்சி செய்கிறேன். கூட்டத்திற்கு எல்லோரும் கலந்துகொண்டு சிறப்பு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.