விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 26வது கூட்டம் ஒரு நல்ல துவக்கமாக அமைந்தது போல் தோன்றுகிறது. திருப்பூர் கிருஷ்ணனுக்கு நன்றி.
நாம் பழகிய எழுத்தாளரை நினைவு கூர்ந்து அவரைப் பற்றி சொல்வதோடல்லாம் அவர் படைப்புகளையும் நல்ல முறையில் அறிமுகம் செய்வவது முக்கியம். அதைச் சரியாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிகழ்த்திக் காட்டியவர் திருப்பூர் கிருஷ்ணன். எதிர்பார்க்காமலேயே நல்ல கூட்டம் அன்று. சனி ஞாயிறுகளில் சென்னை மாநகரத்தில் பல இலக்கிய நிகழ்ச்சிகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. வந்திருந்து சிறப்பு செய்தவர்களுக்கு நன்றி.
அவர் பேசியதை ஆடியோவில் பதிவு செய்துள்ளேன். இதை இங்கு அளிக்க விரும்புகிறேன். எல்லோரும் கேட்டு மகிழும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.