நாளை நடைபெற உள்ள விருட்சம் இலக்கியச் சந்திப்பின் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்யும் முன், நானும் என் எழுத்தும் என்ற தலைப்பில் ஒவ்வொருவராக பேச அழைக்கலாமென்று நினைத்தேன். திரூப்பூர் கிருஷ்ணன் அவர்களைப் பேச அழைக்குமுன் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் அவர் நானும் என் எழுத்தும் வேண்டாம். நானும் எழுத்தும் என்ற தலைப்பில் பேசலாம் என்று குறிப்பிட்டார். திரும்பவும் யோசிக்கும்போது நானும் ஜானகிராமனும் என்ற தலைப்பில் பேசுகிறேன் என்றார். நான் சொன்னேன். நானும் தி ஜானகிராமனும் என்று போடலாமென்று சொன்னேன். பின் திருப்பூர் கிருஷ்ணன் அதையும் மாற்றி தி ஜானகிராமனும் நானும் என்ற தலைப்பில் பேசுகிறேன் என்ற குறிப்பிட்டடுள்ளார்.
அதே சமயத்தில் எனக்குள் இன்னொரு எண்ணம் தோன்றியயது. இதே மாதிரி தலைப்பை வைத்துக்கொண்டு அதாவது ஜெயகாந்தனும் நானும், கு அழகிரிசாமியும் நானும், அசோகமித்திரனும் நானும், ஞானக்கூத்தனும் நானும் என்று பொதுவான தலைப்பில் என் எழுத்தாள நண்பர்களைக் கூப்பிட்டுப் பேசச் சொல்வதோடல்லாம் இதைப் பதிவு செய்து அப்படியே புத்தகமாகக் கொண்டு வர இயலுமா என்றும் யோசிக்கிறேன். கூட்டம் எப்படி நடக்க உள்ளது என்பது தெரியாது. நீங்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்.