மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 43


அழகியசிங்கர்  

 தீர்வு

சி மணி


என்ன செய்வ திந்தக் கையை
என்றேன்.  என்ன செய்வ தென்றால்
என்றான் சாமி.  கைக்கு வேலை
என்றி ருந்தால் பிரச்னை இல்லை.
மற்ற நேரம், நடக்கும் போதும்
நிற்கும் போதும் இந்தக் கைகள்
வெறுந்தோள் முனைத்தொங் கல்.தாங் காத
உறுத்தல் வடிவத் தொல்லை
என்றேன்.  கையைக் காலாக் கென்றான்

நன்றி : இதுவரை – சி. மணி – கவிதைகள் – வெளியீடு : க்ரியா –
முதல் பதிப்பு : அக்டோபர் 1996 – விலை : ரூ.100

“மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 43” இல் ஒரு கருத்து உள்ளது

  1. "என்ன செய்வதிந்தக் கவிதையை "
    என்றேன்

    "என்ன செய்வதென்றால்… "
    என்றான் சாமி

    "அர்த்தம் பொருத்தம் என்றிருந்தால்
    பிரச்சனை இல்லை .
    இல்லையேல்
    படிக்கும் போதும்
    நினைக்கும் போதும்
    இந்தக் கவிதை ,
    வெறும் சொல்லடுக்கு
    வார்த்தைத் தொங்கல் .
    தாங்காத உறுத்தல்
    வடிவத்தொல்லை "என்றேன்

    "கவிதையைக் கேள்வியாக்கு "
    என்றான்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன