அழகியசிங்கர்
காலையில் வாக் போகும்போது எனக்கு கவிதை வரிகள் தோன்றினால் வீட்டில் உள்ள கர்னாடக வங்கி டைரியில் எழுதி வைப்பேன். தேதி எழுதுவேன். நேரம் எழுதுவேன். ஆனால் யாரிடமும் இதுமாதிரி எழுதுவதை காட்ட மாட்டேன். கிட்டத்தட்ட 30 க்கு மேல் கவிதைகள் எழுதியிருப்பேன். நானே படித்து ரசிக்கக் கூடிய கவிதைகள் இவை. அவற்றில் ஒன்று ஜெயமோகன் என்ற தலைப்பில் ஒரு கவிதை. இதோ உங்களுக்குப் படிக்க அளிக்கிறேன்.
ஜெயமோகன்
ஆயிரக்கணக்கான பக்கங்களில்
மஹாபாரதம் எழுதிக்கொண்டே போகிறார்
படிக்க படிக்க வளர்ந்துகொண்டே போகிறது
எது மாதிரியான எழுத்தளார் இவர்
எப்படியெல்லாமோ யோஜனை செய்கிறார்
என்பது ஆச்சரியம்தான்
எழுத்து அவரை எழுதிக்கொண்டே போகிறதா
ஆனால்
என்ன செய்வது
அவர் எழுதும் வேகத்திற்கு
என்னால் படிக்க முடியவில்லையே…….