அழகியசிங்கர்
வழக்கம்போல் இந்த ஞாயிற்றுக்கிழமை (17.04.2016) கூட்டம் 4.30 மணிக்கு.
விஜய் மகேந்திரன், வினாயக முருகன் வேடியப்பன் முதலிய எழுத்தாளர்கள் கலந்துகொண்டு கதை வாசிப்பதாக கூறி உள்ளார்கள். நீங்களும் வரலாம். தூரம் ஒரு பொருட்டல்ல என்றால் வரலாம்.
புதிய முறையாக கதையைப் படிக்காமல் சொல்லிப் பார்க்கும் முயற்சியை மேற்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
போன ஞாயிற்றுக்கிழமை கவிதையே வாசிக்கவில்லை. இந்த முறை முதலில் கவிதையுடன் தொடங்கலாம் என்று நினைக்கிறோம்.இந்த முயற்சியை இன்னும் பல இடங்களுக்கு எடுத்துச் செல்ல தோன்றுகிறது.
தி நகரில் உள்ள வெங்கட நாராயணன் தெருவில் உள்ள நடேசன் பூங்காவில் நடைபெற உள்ளது.
உங்களுடைய ஆதரவு தேவை.