அழகியசிங்கர்
தி சோ வேணுகோபாலனின் கோடை வயல் தொகுப்பில் உள்ள ஐந்தாவது கவிதை ஞானம். காலக் கழுதை கட்டெறும்பான இன்றும் சாளரத்தின் கதவுகள், சட்டம் காற்றுடைக்கும். அறப்பணி ஓய்வதில்லை. தொடர்கிறது. எந்த மாற்றமும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது வாழ்க்கை என்கிறாரா?
ஞானம்
சாளரத்தின் கதவுகள், சட்டம்;
காற்றுடைக்கும்.
தெருப்புழுதி வந்தொட்டும்.
கரையான் மண் வீடு கட்டும.
அன்று துடைத்தேன்,
சாயம் அடித்தேன்,
புதுக்கொக்கி பொருத்தினேன்.
காலக் கழுதை
கட்டெறும்பான
இன்றும்
கையிலே
வாளித்தண்ணீர், சாயக்குவளை,
கந்தைத்துணி, கட்டைத் தூரிகை;
அறப்பணி ஓய்வதில்லை
ஓய்ந்திடில் உலகமிலலை!