தோட்டி
ந மகாகணபதி
ஈக்களை, நேற்று விரட்டி
நீ படுத்திருக்கையில் மற்ற
குப்பைகளை வாரிப்போனேன்.
கடித்து மகிழ்ந்த கரும்புச் சக்கைகள்
கால் பரப்பிக் கிடக்கும் பழத்தோல்கள்.
வாடிய இலைகள் இவற்றை விட்டு ஈக்கள்
உன்னை, இன்று மொய்க்க, நீ அவற்றை
விரட்டவில்லை
மூலையில்
வழக்கமாய் மாடுகள் நிற்க
நானும் நிற்க, வேலையும்
நிற்கிறது நடக்காமல.
இந்தத் கவிதையை எப்படி அர்த்தப்படுத்துவது. படுத்திருப்பவள் தோட்டியா? அவளுக்கு உதவியாய் அவளுக்கு நெருக்கமானவள் வருகிறாள். அடுத்த நாள் ஈக்கள் படுத்துக்கிடந்தவளை மொய்கிறது. அப்படியென்றால் அவள் சவமாக மாறிவிட்டாள். அவளுக்கு உதவி செய்ய வந்தவள் ஒன்றும் தோன்றாமல் நிற்கிறாள். அற்புதமான கவிதை.