ஆகாயம் தாண்டி வா..



 வித்யாசாகர்





டிவா ஓடிவா ஆகாயம் தாண்டி வா
அழகுமயிலப் போல நீயும்
தோகை விரித் தாடிவா,

கிழங்கு வத்தல் தின்னலாம் கண்ணாமூச்சி ஆடலாம்
குனிந்து நிமிர்ந்து குதிக்கலாம்
குச்சி தள்ளி ஓடலாம்!

ஆடிவா ஓடிவா ஆகாயம் தாண்டி வா
நாலுபாய்ச்சல் குதிரைப்போல
துள்ளித் துள்ளி ஓடி வா,

நொண்டி காலு ஆடலாம் நிலாமேல ஏறலாம்
மூச்சடக்கி ஓடலாம்
முழுக்கடலைத் தாண்டலாம்!

ஆடிவா ஓடிவா ஆகாயம் தாண்டி வா
ஆண்டக் கதையைப் பாடி வா
பழையவீர(ம்) ஊட்ட வா,

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன