அழகியசிங்கர்
நந்தாகுமாரன் என்ற கவிஞர் üமைனஸ் ஒன் – 1ý என்ற கவிதைத் தொகுப்பை எனக்கு அனுப்பியிருந்தார். உடனே நானும் அவர் கவிதைகளைப் படித்து அது குறித்து சில குறிப்புகளை எழுதி வைத்திருந்தேன். பின் அத் தொகுப்பையும், குறிப்பையும எங்கோ வைத்துவிட்டேன். உடனே எழுத முடியாமல் போய்விட்டது.
இத் தொகுப்பைப் பற்றி எதாவது எழுதியே தீர வேண்டுமென்ற எண்ணத்துடன் திரும்பவும் அவருடைய புத்தகத்தையும், நான் எழுதி வைத்த குறிப்புகளையும் தேடிக் கண்டுபிடித்தேன்.
இந்தப் புத்தகத்தில் அவர் 89 கவிதைகள் எழுதி உள்ளார். அவருடைய கவிதைகள் எல்லாம், எல்லாப் பத்திரிகைகளிலும் பிரசுரம் ஆகி இருக்கின்றன. வெகு சுலபமாக வார்த்தைகளை வைத்து கவிதைகளில் விளையாடி இருக்கிறார். அவர் இப்படியே எழுதிக்கொண்டு போனல் ஒரு ஆயிரம் கவிதைகளாவது எழுதி இருப்பார்.
நான் அப்போது எழுதி வைத்த குறிப்புகளை இப்போது ஒவ்வொன்றாய் அடுக்குகிறேன்.
– நந்தாகுமாரன் கவிதைத் தொகுதி எல்லா விதங்களிலும் வித்தியாசமாக இருக்கிறது;
– தன் முதல் கவிதைத் தொகுதியில் நந்தா பல தகவல்களை அலட்சியமாக அலசுகிறார். பல இடங்களில் கவிதை அவரிடமிருந்து நகர்ந்து அவரை நோக்கியே விரைகிறது
– நீ நான் என்று பெரும்பாலான கவிதைகளில் ஒரு சொல்லாடலை உருவாக்குகிறார். அதன் மூலம் அவர் சொல்ல வருவதுதன் கவிதை. கவிதையின் ஒத்தக் குரலாக அவர் தென்படுகிறார்.
– அவர் கவிதைகளில் அவருடைய üநான்ý அவரைத் தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறது. கவிதை தன் வயமாக நகர்ந்து போய்க் கொண்டிருக்கிறது. உதாரணமாக, காட்சி ஒன்று என்ற கவிதை (பக்கம் : 13)
ஏதோ ஒரு செடி
ஏதோ ஒரு பயன்
தொட்டியில் இருப்பதால்
என்ன என்ற கேள்வி
‘நான்’ எப்போதாவது
கொப்பளித்துத் துப்பிவிடும் நீரை
ஆவேசமாக உறிஞ்சும்
அதன் Survival
இன்னொரு உதாரணம் : üஇங்கே நான்ý (பக்கம் 12) என்ற கவிதை.
வானத்தை சுருட்டி
பைக்குள் போட்டுக்கொண்டேன்
கடலை நான்காக மடித்து
பாக்கெட்டுக்குள் திணித்துக் கொண்டேன்
மலைகளைப் பொறுக்கி
மடியில் கட்டிக் கொண்டேன்
பூமியை
எட்டி
உதைத்தேன்
‘நான் யார்’
திரும்ப திரும்ப நான் இவர் கவிதைகளில் இவரிடம் வந்து தொந்தரவு செய்கிறது. இவர் எதிரில் யாரோ இருப்பதுபோல் நினைத்து இவர் அதிகமாக கவிதைகள் எழுதித் தள்ளியிருக்கிறார். அப்படி எதிரில் இருப்பவர், இவர் காதலியோ மனைவியோ இருக்கலாம்.
கவிதைகளைப் பற்றி கவிதைகள் எழுதுவது திகட்டுகிற ஒன்று. இவர் அதிகமாக அதுமாதிரி கவிதைகள் எழுதித் தள்ளியிருக்கிறார். பின் சோதனை முயற்சியாக பல கவிதைகள் எழுதியிருக்கிறார். இவருடைய பெரும்பாலான கவிதைகளில் ஆங்கில சொற்கள் அதிகமாக நெளிந்து கொண்டிருக்கின்றன. இவர் இலக்கில் கவிதை பிடிபடாமல் சுழன்று சுழன்று சுற்றிக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது.
கவிதை என்றால் எதை வேண்டுமானாலும் எழுதலாம். ஒருமுறை எழுதியதை திரும்பவும் எழுதாமல் இருக்க வேண்டும்.
நம் எதிரில் யாரோ இருக்கிறார்கள் என்று நினைக்காமல் பொதுவான தன்மையுடன் கவிதைகள் எழுத வேண்டும். நந்தாகுமாரனுக்கு என் வாழ்த்துகள்.
மைனஸ் ஒன் – 1 – கவிதைகள் – நந்தாகுமாரன் – பக்கம் : 111 – விலை ரூ.90 – உயிர்மை பதிப்பகம், 11 /29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 18
how to write thesis proposal writing a thesis paper