பாதைப் பசுக்கள்
பால் வற்றிய பசுக்களும்
மலட்டுப் பசுக்களும்
கவனிப்பாரற்ற கறவைகளும்
தசைகள் அசைத்து
மெல்ல சாலைகளின் ஊடே
நடப்பதனால்
வண்டிக் காளையின்
கவனம் கெட்டுக்
குழப்பமும் விபத்தும்
நிகழ்வது தவிர்க்க
உரிமையாளர்க் கொரு
பணிவான வேண்டுகோள்
அவரவர் பசுக்களை
ஒழுங்கில் வைக்கவும்
அநாதைப் பசுக்களை
அரசுக் காக்கும்
ஆர். வி சுப்பிரமணியன்