2012ல் நான்கு புத்தகங்களும் 2013ல் 6புத்தகங்களையும் கொண்டு வந்துள்ளேன். புத்தகங்கள் பற்றிய விபரம் இதோ:
ரோஜா நிறச்சட்டை – சிறுகதைகள் – அழகியசிங்கர் – விலை ரூ.100 – பல ஆண்டுகளாக கதை எழுதி வருபவர். கதை எழுதும்போது எப்போதும் உற்சாகமாகவே இருந்திருக்கிறார். அனுபவத்தை ஒரு கேடயமாக வைத்து கதைகள் எழுதினாலும், அனுபவம் வேறு, கதைகள் வேறு. கிட்டத்தட்ட 60 கதைகள் எழுதியிருக்கிறார்.
வினோதமான பறவை – கவிதைகள் – அழகியசிங்கர் – விலை ரூ.60 – üஅழகியசிங்கர் கவிதைகள்ý என்ற தொகுதிக்குப் பிறகு வெளிவரும் தொகுப்பு இது. எழுதிய கவிதைகள் பல எந்தத் தேதியில் எந்த வருடத்தில் என்ற குறிப்பை வைத்துக்கொள்ளாமல் எழுதப்பட்டவை.
ஓசிப்மெண்டல்ஷ்டாம் கவிதைகள் – மொழிபெயர்ப்பு பிரம்மராஜன் – விலை ரூ,20 – இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த ரஷ்யக் கவிஞரான ஓசிப்மெண்டல்ஷ்டாம் பற்றிய முதல் அறிமுக நூல் இது. மெண்டல்ஷ்டாமின் 22 கவிதைகளும் அக்மேயிச இயக்கம் பற்றிய நூல்,
ழ கவிதைகள் – கவிதைகள் – பக்கம் ரூ.100 – 1990 ஆண்டில் முதல் பதிப்பாக வெளிவந்த ழ கவிதைகள் என்ற இந்தத் தொகுப்பு மீண்டும் மறு பிரசுரமாக 23 ஆண்டுகள் கழித்து வெளிவருகிறது.
ராம்காலனி-சிறுகதைத் தொகுதி-அழகியசிங்கர் – விலை ரூ.130 – 60 வயதாகிற அழகியசிங்கரின் 3வது சிறுகதைத் தொகுதிதான் ராம் காலனி என்ற புத்தகம். இதன் இரண்டாவது பதிப்பு கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு 2013ஆம் ஆண்டு பிரசுரம் ஆகிறது.
406 சதுர அடிகள் – சிறுகதைகள் – அழகியசிங்கர் – விலை ரூ. 70 – 406 சதுர அடிகள் என்ற அழகியசிங்கரின் சிறுகதைத் தொகுப்பின் முதல் பதிப்பு டிசம்பர் 1997 ஆம் ஆண்டு வெளிவந்தது. இரண்டாவது பதிப்பு ஆகஸ்ட் 2003ஆம் ஆண்டு வெளிவந்தது. இது மூன்றாவது பதிப்பு.