தேடி மிகச் சோர்ந்துவிட்டேன்
இனி தெய்வம்தான் எனக்குத்துணை.
நாடி எனை எதுவென்று கேட்போர்க்கு
நான் சொல்வேன் தொலைத்தகதை.
ஐந்து விரல் பதிந்த
அடையாளச்சின்னமாய்
அதற்குக்கன்னம்.
முகமும்அதுவே.
அதைத்தாங்கும்
கைபோல சின்னப்பிடி.
அதன் பெயரின் முதல்பாதியில்
அமைதிக்குப்பெயர்போன
அன்னம் இருக்கிறது.
என் புகுந்தவீட்டு சொத்து.
தொலைத்துவிட்டதால்
என் மாமியாரிடமிருந்து
கிடைக்கலாம் மொத்து!
கல்வைத்த தங்க அட்டிகையாயிருந்தால்
கள்வர் கொண்டுபோயிருக்கமுடியும்
அள்ளி அமுது படைக்கும்
ஆகிவந்த அன்னக்கரண்டியை
தள்ளிக் கொண்டு
போனது யாராயிருக்கும்?
தோழியைப்பிரிந்த ஏக்கத்தில்
குழைந்து கூழாகிவிட்டது சாதம்.
கடத்திச் சென்றவர்களைக்
கண்டுபிடித்து அன்னக்
கரண்டியை மீட்டுத்தருபவர்கள்,
கைத்தொலைபேசியில் எனக்கு
தகவல் தருக!
தக்க பரிசு உண்டு!
அன்னக் கரண்டியைத் தேடப் போய் அகம் வந்தது ஒரு கவிதை
கண்டிப்பாக தகவல் தருகிறோம்:)! என்ன பரிசு ஷைலஜா?
நன்றி திரு நீலகண்டன்
ராமலக்ஷ்மி said…
கண்டிப்பாக தகவல் தருகிறோம்:)! என்ன பரிசு ஷைலஜா
<<<<<<<<<<<<<<<<<
பரிசா?ம்ம்ம்…
முத்துச்சரமாய் கோக்கிறீங்களே உங்க வலைல நிஜ முத்துச்சரம் ஒண்ணு வெளிநாட்டு டூர் வந்த இடத்துல வாங்கிவரேனே!!!