லதாமகன் கவிதை

குட்டி மீனைப்போல்
வாய்திறந்து பாடத்தொடங்குகிறாள்
சந்தியாக்குட்டி
ஸ்வரங்கள் தப்பிய
குரலுக்கு ஏற்ப
தன் ஸ்வரங்களை மாற்றிக்கொள்கிறது
இசை
o
டம் டம் சத்தத்தில்
ஆடத் தொடங்கும் கால்கள்
சந்தியாவுடையவை.
ஆடிமுடித்து
அப்பா என ஓடி வந்து
வெட்கத்துடன்
அணைத்துக் கொள்ளும்போதுதான்
முழுமையடைகிறது
எனக்கான நடனம்.
o
நீரை அள்ளி
கடலுக்குள் தெளித்துக் கொண்டிருக்கிறாள்
சந்தியாக்குட்டி
ஸ்பரிசங்களில் தன்
பிறப்பிடம் அறிகிறது
முன்னாள் மழை.
o
பப்லுக்குட்டிக்கு மம்மு என
பொம்மைக்கு
புட்டிப்பால் ஊட்டுகிறாள்
சந்தியாக்குட்டி
அகலச் சிரித்து
உடலெங்கும் பாலாகிறது
பப்லுகுட்டி.
o
எங்கள் எல்லோரையும்போல்
நடித்துக் காட்டுவாள்
சந்தியாக்குட்டி
அவளைப்போல்
வாழ்வதற்கு
இன்னும் யாரும் பிறக்கவில்லை.
oOo

“லதாமகன் கவிதை” இல் 4 கருத்துகள் உள்ளன

  1. நல்ல கவிதை…. இந்த பரபரப்பான உலகில் இந்தக் குழந்தையைப் போல் வாழ்க்கை எல்லாக் குழந்தைக்கும் கிடைத்து விடுவதில்லை
    குமரி எஸ். நீலகண்டன்

  2. //குட்டி மீனைப்போல்
    வாய்திறந்து பாடத்தொடங்குகிறாள்
    சந்தியாக்குட்டி
    ஸ்வரங்கள் தப்பிய
    குரலுக்கு ஏற்ப
    தன் ஸ்வரங்களை மாற்றிக்கொள்கிறது
    இசை
    o
    டம் டம் சத்தத்தில்
    ஆடத் தொடங்கும் கால்கள்
    சந்தியாவுடையவை.
    ஆடிமுடித்து
    அப்பா என ஓடி வந்து
    வெட்கத்துடன்
    அணைத்துக் கொள்ளும்போதுதான்
    முழுமையடைகிறது
    எனக்கான நடனம்.//

    மிக ரசித்த வரிகள்..

    குழந்தைகளைப்பற்றி கவிதைகளை வாசிக்கையிலெல்லாம் குழந்தையாகிவிடுகிறது மனசு..

    அழகிய கவிதைக்கு பாராட்டுக்கள்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன