ஆட்டோவின் ஓரத்திலிருந்து
சிறுமியொருத்தி புன்னகைக்கிறாள்
பெயர் தெரியா அப்பூக்களின் அழகை
கண்களில் நிறைத்தபடி செல்கிறேன்…
பின்னொரு நாள்
உடலாய் மட்டும் உணர வைக்கும்
பேருந்துப் பயணத்தில்
கூட்ட நெரிசலை சமாளித்தபடி
உள்ளங்கைகளில் ரோஜாவை
பாதுகாத்து கொண்டிருந்தாள்
அரும்புப் பெண் மகள் ஒருவள்.
தொலைகாட்சி மக்களை முழுங்கிய
ஆளரவமற்ற தெருக்கள் வழியே
துக்கத்தில் நெஞ்சு வெதும்ப
நடந்து வந்த அந்நேரம் கண்டது
அந்தியின் மென்னிருள் ஊடே
வண்ணங்களின் குளுமையை
அள்ளித் தெளித்த
நித்யகல்யாணி பூக்களை.
யோசித்தால்
வாழ்கையைப் பற்றிச் செல்ல
பிறிதொரு தேவை இல்லை.
பூ மனம் மணக்கும் கவிதை.
//யோசித்தால்
வாழ்கையைப் பற்றிச் செல்ல
பிறிதொரு தேவை இல்லை//
இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு தோழி.
நன்றி தோழி.