பெண் கவிஞர்களின் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

ஏவாளின் உரையாடல்

கேரில்டா ஆலிவர் லேப்ரா (க்யூபா)

இன்று, உன்னை முரட்டுத்தனமாக வரவேற்கிறேன்.
ஒரு உறுமலுடன்
அல்லது ஒரு உதையுடன்.
எங்கே ஔதந்துகொண்டிருக்கிறாய்,
இதயங்கள் நிரம்பி வழியும்
உனது காட்டுத்தனமான பெட்டியுடன்஢,
நீண்டோ டும் உனது வெடி மருந்துடன்
எங்கே ஓடிப்போனாய்?
இப்போது எங்கே இருக்கிறாய்;
எல்லாக் கனவுகளும்
கடைசியாக சுண்டி எறியப்படும் சாக்கடைக்குள்ளா,
அல்லது தகப்பனற்ற குழந்தைகள்
ஊசலாடிக் கொண்டிருக்கும்
வனத்தின் சிலந்தி போன்ற வலையிலா?

உன் நினைவாகவே இருக்கிறேன்,
உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறேனென்று உனக்கும் தெரியும் –
என்னையே போல்
ஒருபோதும் நிகழாத அற்புதத்தைப் போல் –
ஏங்குகிறேனென்று உனக்கும் தெரியுமில்லையா?
ஒருபோதும் அறிந்திராத மகிழ்ச்சியால்
உன்னைக் கவர்ந்திழுக்க விரும்புகிறேன்,
ஒரு விவேகமற்ற காதல் விவகாரம்.

எப்போது என்னிடம் வருவாய்?
விளையாட்டேதும் விளையாட வேண்டுமென்ற
ஆதங்கத்஢தோடில்லை நான்,
உன்னிடம் ஒப்படைக்க வேண்டும்; ”எனது வாழ்வை” —
நம்மை இடி பணிவுபடுத்த,
ஆரஞ்சுகள் உனது கைகளில் வௌதறிப்போக,
நான் உனது ஆழங்களில் தேடி
இறுதியாகத் தீப்பிழம்பில் மறையும்
திரைகளையும் புகையையும் காண வேண்டும்.

நான் உன்னை உண்மையிலேயே விரும்புகிறேன்
ஆனால் வெகுளித்தனமாக
எனது எண்ணங்களின்
களங்கமற்ற மோகினியைப்போல்,
ஆனால், உண்மையில் நான் உன்னை விரும்பவில்லை.
வெகுளித்தனமான
குழம்பிய தேவதையாக நான் இருந்தாலும்
நான் உன்னை விரும்புகிறேன்,
ஆனால் நான் உன்னை விரும்பவில்லை.
இந்த சொற்களைக் கொண்டு நான் சூதாடுகிறேன்
ஜெயிப்பவள் புளுகி ஆவாள்.
காதல்!…
(என்ன சொல்கிறேன் நான்?
என்னைத் தவறாகப் புரிந்து கொள்கிறீர்கள்,
ஏனென்றால் இங்கே, நான் உன்னை வெறுக்கிறேன்,
என்று எழுத விரும்பினேன்)
நீயேன் என்னிடம் வரமாட்டேன் என்கிறாய்?
நமது நெருப்புக்கு கைம்மாறு செய்யாமல்
என்னைக் கடந்து போக அனுமதித்தாயே
அது எப்படிச் சாத்தியம்?
மிகவும் திகிலடைந்து போய்
மிகவும் தொலைவுபட்டுப் போய் என்னை மறுக்கிறாயே
அது எப்படி சாத்தியம்?
மரணத்தின் வழியாக
வாழ்வின் வழியைக் கடந்து சென்று
செய்தித் தாள்களைப் படித்துக் கொண்டிருக்கிறாய்
உனது முனகல்களோடும்
உனது அடிவயிற்றோடும்
உனது பிரச்னைகளோடு நீ இருக்கிறாய்,
அக்கறையற்று,
மானங்கெட்டு,
துக்கங்கொண்டாடும் விழைவுடன்
உன்னை நீ மகிழ்வித்துக்கொண்டிருக்கிறாய்.
உன்னை நான் உருக வைத்஢தாலும்,
உன்னை நான் அவமானப்படுத்தினாலும்,
உன் மனச்சோர்வை அங்கீகரிப்பதுபோல்
ஒரு வதங்கிய செந்நீல மலரைக் கொண்டுவந்தாலும்;
சொர்க்கத்தின் உப்பை வௌதவரச் செய்து
உன்னை இருப்போடு தைத்தாலும்:
என்ன?
உனது எச்சிலால் எப்போதென்னைக் கொல்லப் போகிறாய்,
நாயகனே?
எப்போது திணறடிக்கப்போகிறாய்
மறுபடியும் மழையின் கீழ்?
எப்போது?
எப்போதென்னை சிறுபறவையே,
சிறுக்கியே என்றழைக்கப் போகிறாய்?
எப்போது என்னைத் தீட்டுப்படுத்தப்போகிறாய்?
எப்போது?
கடந்துபோகும் காலத்திடம் ஜாக்கிரதை,
காலம்
காலம்!
உனது பூதங்களும்கூட இப்போதென்முன் தோன்றுவதில்லை,
மேலும் இப்போதெல்லாம் குடைகளை எனக்குப் புரிவதில்லை?
ஒவ்வொரு நாளும், என்னிடம்
கூடுதலாகக் கண்ணியமடைகிறேன்,
சிறப்பாக மேன்மையடைகிறேன்…
நீ காலந்தாழ்த்தினால்
தயக்கம் காட்டினால், என்னைத் தேடாவிட்டால்,
உன் கண் அவிந்து போகும் –
இப்போது நீ திரும்பிவராவிட்டால்
நாத்திகா, மடப்பயலே, கேனப்பயலே, முட்டாளே,
கவலையே படமாட்டேன்.

நேற்று கனவு கண்டேன்
நாம் முத்தமிடும்போது
ஒரு எரிநட்சத்திரம் வெடித்தது
நாம் இருவருமே நம்பிக்கை இழக்கவில்லை.
நமது இந்தக் காதல் யாருக்கும் சொந்தமானதில்லை;
அது கதியற்று தெருவில் கிடந்தபோது கண்டெடுத்தோம்,
நமக்குள் அதைக் காப்பாற்றினோம், அடைக்கலம் தந்தோம்.
அதனால், இரவில் நாம்
ஒருவரை மற்றவர் விழுங்கும்போது,
தனித்து விடப்பட்ட
நிராதரவான தாயைப்போல் உணர்ந்தேன்.
அதனால் பரவாயில்லை,
முத்தமிடு மீண்டும் மீண்டும்
என்னிடம் வருவதற்காக.
எனது இடுப்பின் மீது அழுந்து,
மீண்டும் என்னிடம் வா;
மீண்டும் எனது இதமான விலங்காயிரு,
என்னை நகர்த்து மீண்டும்.
மீதமுள்ள என் வாழ்வை,
பழிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்வை,
நான் புனிதப்படுத்திக் கொள்வேன்.

ஒப்பற்ற மலர்ச்சியில்
அன்பால் ஒன்றிணைந்து
தங்களைக் காப்பாற்றிக் கொண்டுவிட்ட
கொலைகாரர்களைப் போல் உறங்கலாம் நாம்.
காலையில் சேவல் கூவும் போது,
நாம் இயற்கையாகவே
அவளாகவே ஆகிவிடலாம்.
அவளது தொட்டிலில் தூங்கும்
உனது குழந்தையைப் போல்
காணப்படுவேன் அப்போது.
என்னிடம் திரும்பி வா, திரும்பி வா,
மின்னலால்஢ என்னை ஊடுருவு,
உன் இஷ்டம்போல் என்னை வளை.
ரெகார்ட் பிளேயரை முடிவற்று ஒலிக்கச் செய்வோம்,
அந்த விசுவாசமற்ற கழுத்துப் பிடரியை,
உனது கல்லின் வீச்சைக் கொண்டு வா,
நான் சாகவில்லை என்பதைக் காட்டு,
என் அன்பே,
உனக்கு ஆப்பிளைத் தருவேனென்று
உறுதி அளிக்கிறேன்.

தமிழாக்கம்: குவளைக் கண்ணன்

கீரை விற்கும் சிறுவன்

கேரில்டா ஆலிவர் லேப்ரா

(க்யூபா)

உனக்குப் பெற்றவரில்லை, அது தௌதவாகத் தெரிகிறது…
உனது தயங்கிய பார்வையில் அது எனக்குத் தெரிகிறது,
உனது சட்டையை வைத்தே என்னால் சொல்ல முடியும்.

நீ சிறியவனாக இருக்கறாய், ஆனால்
கூடைக்குப் பின்னால் வளர்ந்திருக்கிறாய்.
நீ குருவிகளை மதிக்கிறாய்.
ஒற்றைக் காசு போதும் உனக்கு.

உள்ளே எஃகை உடுத்தியவர்கள் கடந்து போகிறார்கள்.
அவர்கள் உன்னைக் கவனிப்பதில்லை… நீ இரண்டு,
மூன்று முறை ”கீரை கீரை…” என்று கத்தினாய்

அவர்கள் பெட்டிகளையும் கூடைகளையும் சுமந்தபடி
புதிய கால்சராய்களிலும் மஞ்சள் ரவிக்கைகளிலும்
அக்கறையற்றுக் கடந்து போகிறார்கள்;

அவர்கள் வங்கிகளை நோக்கி சலிப்பை நோக்கி
அல்லது அஸ்தமனத்தை நோக்கி முக்கியத் தெருவில்
அவசரமாக நடக்கிறார்கள்…

மேலும் நீ விற்கவில்லை: விற்கும் விளையாட்டைச்
செய்து கொண்டிருக்கிறாய்;
மேலும் நீ ஒருபோதும் விளையாடியிருக்காவிட்டாலும்,
முயற்சிக்காமலே உனக்கது வருகிறது…

ஆனால் என்னருகே வராதே; வேண்டாம், குழந்தை,
என்னிடம் பேசாதே.
சிறகுகள் முளைக்கக்கூடிய இடத்தை
நான் பார்க்க விரும்பவில்லை.

இன்று காலை நீதிமன்றத்துக்கு அருகில் உன்னைப் பார்த்தேன்.
உனது மகிழ்ச்சியற்ற மாசின்மை
என்னை எப்படித் தாக்கியது தெரியுமா!

மாயையின் தாழியாய் இருந்த என் இதயம்,
இப்போது வதங்கிய கீரையாக, இதயமாக இல்லை…

தமிழாக்கம்: குவளைக் கண்ணன்

அம்மா மியாமியிலிருந்து வந்த ஒரு கடிதத்தில் நீ இருக்கிறாய்

கேரில்டா ஆலிவர் லேப்ரா (க்யூபா)

அம்மா, நீ ஒரு கடிதத்தில் மட்டுமே இருக்கிறாய்,
என்னால் தேடிப் பிடிக்க முடியாத
ஒரு பழைய வசவிலும் நீ இருக்கிறாய்;
ஒருபோதும் உதிராத
மலரும் ரோஜாவின் மையத்தில்
வந்து தங்கு எவ்வப்போதைக்குமாக.

அம்மா,
மூடுபனியிலும் பனித் திரளிலும் களைத்துப் போய,஢
அவ்வளவு தொலைவில்,
இரு, நான் வருகிறேன்,
உனக்குள்ளே இருக்கும் சூரியனோடு வாழ்வதற்காக
உன்னை வீட்டுக்குக் கொண்டு வருகிறேன்,
அம்மா கடிதத்தில் வாழ்பவளே.

சேர்ந்திருக்க மர்மத்திற்கு நீ ஒரு தேதி தரலாம்,
அது மருட்டும் நிழல்களோடு கலந்துபோகும்;
நீ உருட்டித் தள்ளிய கல்லாகிவிடலாம்.

உன் கண்களுக்குக் கீழேயுள்ள வளையங்஢களை
மறைத்துக் கொள்ளலாம்,
ஆனால் உன் குட்டி மகளை
நினைவில் வைத்துக் கொள்,
உன்னால் செய்ய முடிந்ததையெல்லாம்
செய்யத் துணிந்துவிடாதே,
செத்துவிடாதே, அம்மா.

தமிழாக்கம்: குவளைக் கண்ணன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன