நீர்ப்பறவை நீந்தாத வரையிலும்
மீன்கள் துள்ளிக் குதிக்காத வரையிலும்
மழைத்திரவம் சிந்தாத வரையிலும்
சிறுவர்கள் கல்லெறிந்து விளையாடாத வரையிலும்
காற்று பலமாக வீசாத வரையிலும்
சலனமற்று கிடக்கின்ற குளத்துநீரில்
தங்கள் பிம்பத்தை ரசித்துக் கொண்டிருக்கும்
கரையோர பனைமரங்கள்
wonderful collection of thoughts..
simple yet inspiring
congrats
இன்று படிக்கும் முதல் கவிதை. ரொம்ப அழகா இருக்கு.
அனுஜன்யா