கவிதைக்கான குறியீடை
இதனுள் பொருத்தும் முன்பே
வந்தமர்ந்து கொண்டது பூனை
அர்த்தப்படாத எழுத்துச்சிதறல்களில்
அர்த்தமுணர நினைக்காது
வால் வளைத்து ஓரமாய்த்தான்
சுருண்டு படுத்துள்ளது
உணரலில்லாது நிதானமாய்
வரி தாண்டியிருக்கக்கூடும்
தன்னைப்பதிவு செய்தலில்
வேறெதும் நிச்சயப்படவில்லை
கவிதை பூனையான சாத்தியம் தவிர்த்து

அன்பு சென்ஷி,
’கவிதைக்கான குறியீடை
இதனுள் பொருத்தும் முன்பே
வந்தமர்ந்து கொண்டது பூனை’
கவிதை முதல் மூன்று வரிகளில் முடிந்து விடுகிறது, ஏனைய வரிகள் அதன் நீட்சி என்றே படுகிறது எனக்கு.
அன்புடன்,
ராகவன்
shenshi,
enakku pitiththirukkiRathu nanba.
vaazhththukkal.