ஆங்கிலத்திலிருந்து தமிழில் : அழகியசிங்கர்
தொலைந்துபோன ஒரு பையனைப்பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன்
மாலை 5.35 மணிக்கு என்ன செய்து கொண்டிருந்தான்
தெரு ஓரத்தில் ரானிகட் என்ற இடத்தில் இருக்கும்
தபாவில் அவன் டம்பளர்களையும், தட்டுக்களையும் கழுவிக் கொண்டிருந்தானா
மலை உச்சிக்குச் சென்று விட்டானா?
மறைவாக தீவிர வாதிகள் வசித்துவரும் காட்டிற்குப் போனானா?
பத்து நிமிடங்களுக்குமுன் அந்தப் பையனை ரயில்
விட்டுச் சென்றிருக்கும் கிராம ஒன்றின் வயலில் விளைந்திருக்கும் பச்சைப்பசேலென்ற நெற்கதிர்களைப் பார்க்கிறானா
அவனுக்குத் தெரியுமா அவனுடைய தந்தை
கடந்த மூன்று மாதங்களாய் பென்சன்
வாங்கவில்லை என்பது. தெருவில் நின்றுகொண்டு பாதையைப் பார்த்துக்கொண்டிருந்தார் கிராமத்தைத் தாண்டி
எத்தனை தூரம் இந்தப் பாதை செல்லும்
என்று யோசித்தபடியே.
அவனுக்குத் தெரியுமா
அவனுடைய அம்மா
ரொட்டியைச் சுட்டுக்கொண்டிருக்கும்போது
வெளியே தெரியும் இருட்டைப் பார்த்துக்கொண்டு
யோசனை செய்கிறாள் என்று
இதுதான் அவள் முதல் இருட்டு
அவளுடைய முதல் கர்ப்பம்போல
ஒருநாள் அவளுடைய விருப்பத்திற்குரிய மகனை
எப்படியாவது அழைத்துக்கொண்டு வந்துவிடும்
அவனுக்குத் தெரியுமா?
ஒரு நொடியில் எதையெல்லாம் அவன் விட்டிருக்கிறானென்று அக்கறையுடன், வலியுடனும்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் மனிதன்
வீடு என்று கட்டியிருப்பதை