(கணையாழி கடைசிப் பக்கங்கள்)
(முகநூலிலிருந்து எடுத்தது)
தீபாவளி என்றதும் தீபாவளி மலர்களைப் பற்றி சுஜாதா (கணையாழி கடைசிப் பக்கம்) கிண்டலடித்து எழுதியது
நினைவுக்கு வருகிறது.
======================
இனி சுஜாதா……
தீபாவனி என்றால் தீபாவளி மலர்கள் வரும் தினம் “ந்ருஸிம்ஹப்ரியா” உட்பட எல்லரப் பத்திரிகைகளும் மலர்கள் போடுகின்றன.
விளம்பரங்கள் நிறையப் போட்டு குண்டாகச் சில பத்திரிகைகள்…! மற்றவையெல்லாம் சோனி மலர்கள்.
குண்டு மலர்களைப் பார்வையிட்டதில் ஒரே மாதிரியான pattern தெரிகிறது.
அட்டையில் ஒயிலாகப் படம். பார்வதி பரமேச்வரர் படமானாலும் கவர்ச்சியாக இருப்பது முக்கியம். முகப்புப் படமாக சங்கராச்சாரியார்.
அவரைப் பற்றி எதிர்ப் பக்கத்தில் அறுசீர்கடி நெடிலடி ஆசிரிய விருத்தம்.
அப்புறம் கதைகள். கதைகள், இன்னும் கதைகள்.
டாய்லெட் பேப்பர் விளக்கங்களுடன் டாப்லெஸ் நாயகிகளின் ஓவியங்கள்…
மாமனார் மாப்பிள்ளை அசட்டுக் கேலிப்படங்கள்….
‘கலைமகள்’ தீபாவளி மலர் சைஸ் மாறியிருக்கிறது. வேறு மாற்றங்கள் இல்லை.
முதல் தர எழுத்தாளர்களை அவசரப்படுத்தி எழுதச் சொல்லி………ந்தரக் கதைகளை நிரப்பியிருக்கிறார்கள் ‘சுதேசமித்திரன்’ மலரில்.
‘ஆனந்த விகடனும்’ ‘கல்கியும்’ ஒன்றையொன்று மிஞ்சுகின்றன.
எடை போட்டுப் பார்த்ததில் ‘கல்கி’ தீபாவளி மலருக்குத்தான். பரிசு. எட்டு அவுன்ஸ் அதிகம் !!
= = December 1965