சிறகா…..
காற்றில் படபடத்தபடி
நிற்கிறது ஒற்றை தாள்
விம்மும் இதயம் போல்
மெல்லிய ஓரம் அதனை
இப்பக்கம் என்றும்
அப்பக்கம் எனவும்
பிரித்து வைக்கிறது
எழுதப்பட்ட வரிகளின்
அர்த்தம் மாறு பட்டிருக்க
தொலை தூரம் வரை
பயணிக்கிறது ஒன்றாகவே
ஒட்டுற வு இல்லாத படி
மௌனத்தின் துணையுடன்
விரையும் படகுடன்
ஒட்டாது
நீரை அணை த்து
செல்லும் துடுப்பு போல்.
நன்று. படைப்பாளரின் பெயர் பதிவிடப்படவில்லை. ஏன்?
சிறகா….