என்னைப் பற்றிய குறிப்புகள்

1953 டிசம்பர் ஒன்றாம் தேதி பிறந்தேன்.  இயற்பெயர்ச ந்திரமௌலி.  புனைப் பெயர் அழகியசிங்கர்.  1988 ஆம் ஆண்டில் தொடங்கிய நவீன விருட்சம் என்ற இலக்கிய இதழை கடந்த 27 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டு வந்துள்ளேன்.  தற்போது 102வது இதழைக் கொண்டு வந்துள்ளேன்.  இதன் மூலம் பல படைப்பாளிகளை அறிமுகப் படுத்தி உள்ளேன்.  500க்கும் மேற்பட்ட கவிதைகளை பிரசுரம் செய்துள்ளேன்.  நூற்றுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புக் கவிதைகளைக் கொண்டு வந்துள்ளேன்.  தமிழில் வெளிவந்த சிறந்த சிறுகதைகளை விருட்சம் மூலம் கொண்டு வந்துள்ளேன்.  புத்தக மதிப்புரைகளை வெளியிட்டுள்ளேன்.  எந்தவித ஆதாயமும் இல்லாமல் தனிப்பட்ட முயற்சியாக நவீன விருட்சம் இதழைக் கொண்டு வந்துள்ளேன்.  40க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சிட்டுள்ளேன்.  இதைத் தவிர நான் ஒரு எழுத்தாளன்.  80க்கும் மேற்பட்ட சிறுகதைகள், குறு நாவல்களை எழுதி உள்ளேன்.  அவற்றைப் புத்தகங்களாகவும் கொண்டு வந்துள்ளேன்.

 இதுவரை 4 சிறுகதைத் தொகுதிகள் கொண்டு வந்துள்ளேன்.

  • சில கதைகள்
  • 406 சதுர அடிகள்
  • ராம் காலனி
  • ரோஜா நிறச் சட்டை.

மேலும் 250க்கும் மேலாக கவிதைகள் எழுதி உள்ளேன்.

  1. அழகியசிங்கர் கவிதைகள்
  2. வினோதமான பறவை

என்று 2 தொகுப்புகளில் என் எல்லாக் கவிதைகளும் அடங்கும்.  தொடர்ந்து இப்போதும் கவிதைகள், கதைகள் எழுதிக் கொண்டு வருகிறேன்.

சமீபத்தில் 2 ஆண்டுகளாக எதையாவது சொல்லட்டுமா என்ற பெயரில் மாதம் ஒவ்வொரு முறையும் அமிர்தா பத்திரிகையில் வெளிவந்துள்ளன.  அதைத் தவிர navinavirutcham.in  என்னால் எழுத முடிவதை பதிவு செய்து கொண்டு வருகிறேன். ஒரு தேசிய வங்கியில் 35 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன்.  வாழ்க்கையை இனிமேல்தான் புரிந்து கொள்ள முடியும் என்று நமபுகிறேன்.  நாவல் ஒன்று எழுதவும் முயற்சி செய்து வருகிறேன்.

இப்படிக்கு

அழகியசிங்கர்,

சீத்தாலட்சுமி அபார்ட்மெண்ட்ஸ்,
7 ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை 33.
+91 44-24710610
+91 9444113205